கம்பஹா மாவட்டத்தில் 10 மணித்தியால நீர்வெட்டு..

கம்பஹா மாவட்டத்தில் 10 மணித்தியால நீர்வெட்டு..

by Staff Writer 11-08-2025 | 10:32 AM

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு இன்று(11) காலை 10 மணி முதல் 10 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்தது.

அவசர திருத்தப்பணிகள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நிட்டம்புவ, கந்தஹேன, மாபகொல்ல, கொங்கஸ்தெனிய, பின்னகொல்லவத்த, கோலவத்த, கொரகதெனிய, ரன் பொக்குணகம, ரன் பொக்குணகம வீட்டுத் திட்டம், படலீய, அத்தனகல்ல, பஸ்யால, ஊராபொல, திக்கந்த, மீவிட்டிகம்மன, மாஇம்புல, மாத்தலான, ஹக்கல்ல, அலவல, கலல்பிட்டிய மற்றும் எல்லமுல்ல ஆகிய பகுதிகளுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.