மதவாச்சி விபத்தில் பாதசாரி உயிரிழப்பு

மதவாச்சி விபத்தில் பாதசாரி உயிரிழப்பு

by Staff Writer 10-08-2025 | 1:21 PM

Colombo (News 1st) மதவாச்சியில் இன்று(10) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கெப்பித்திகொல்லேவ பகுதியிலிருந்து மதவாச்சி நோக்கி பயணித்த வாகனம், மதவாச்சி இரண்டாம் மைல்கல் பகுதியில் பாதசாரி மீது மோதியுள்ளது.

விபத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மதவாச்சி பகுதியைச் சேர்ந்த 39 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.