.webp)
Colombo (News 1st) மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 'வலஸ் கட்டா' என அழைக்கப்படும் திலின சம்பத் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில் அவர் காயமடைந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
நேற்றிரவு(09) 9.10 அளவில் மலசலகூடத்திற்கு செல்ல வேண்டுமென கூறியதை அடுத்து கைவிலங்கு நீக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
பின்னர் தனக்கான மருந்துகளை வழங்குமாறு கோரியதாகவும் அந்த சந்தர்ப்பத்தில் மருந்து வழங்க முற்பட்ட அதிகாரியை தள்ளிவிட்டு மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு - நீர்கொழும்பு வீதியில் அவர் வீழ்ந்ததாகவும் வீழ்ந்ததில் அவர் காயமடைந்ததாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர் தற்போது பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வலஸ் கட்டா, திட்மிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் போதைப்பொருள் கடத்தல்காரரான கெஹல்பத்தர பத்மேவிற்கு நெருக்கமானவராவார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது அவர் மேல் மாகாணத்தின் வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
இதன்போது மோட்டார் சைக்கிளிலிருந்து 500 கிராமுக்கும் அதிமான ஹெரோயின் கைப்பற்றப்பட்டிருந்தது.