.webp)
Colombo (News 1st) இலங்கை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் தயா லங்காபுர நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்படுள்ளது.
1965ஆம் ஆண்டு பத்திரிகைத்துறையில் பிரவேசித்த தயா லங்காபுர, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரியாவார்.
சிலுமின, திவயின, தினமின உள்ளிட்ட பல பத்திரிகைகளில் பணியாற்றிய இவர், நீதிமன்ற அறிக்கையிடலில் விரிவான அனுபவமுள்ள ஊடகவியலாளர் ஆவார்.