திருகோணமலையில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை

திருகோணமலையில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

by Staff Writer 09-08-2025 | 7:03 PM

திருகோணமலை - கொக்கிலாய் பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொக்குத்துடுவாய் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் மீன்பிடிக்கச் சென்று வீடு திரும்பிய நிலையில் நேற்று(08) அதிகாலை கூரிய ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்காக கொக்கிலாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.