கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் வீழ்ந்து விபத்து..

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் வீழ்ந்து விபத்து ; ஊழியர் பலி..

by Staff Writer 09-08-2025 | 7:08 PM

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.

கொள்கலனை வாகனத்தில் ஏற்ற முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த நபர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் பலனளிக்கவில்லை.

தெதிகம பகுதியை சேர்ந்த 36 வயதான நபரே உயிரிழந்தவர் என்பதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.