.webp)
கொழும்பின் போதைபொருள் பாவனை அதிகமுள்ள இடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன.
போதைப்பொருள் பாவனை அதிகமுள்ள இடங்களாக இராஜகிரிய - ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, வெல்லம்பிட்டி - கொலன்னாவ, பொரளை - வனாத்த முல்ல, மொரட்டுவை - லுனாவ, முகத்துவராம் - மட்டக்குளி ஆகிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்தது.
குறித்த பகுதியில் போதைப்பொருளுக்கு அடிமையாளனவர்களை அடையாளம் காண விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பல அரச நிறுவனங்கள் மற்றும் கிளீன் ஸ்ரீலங்கா ஆகியவற்றின் பங்களிப்புடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
கடந்த வருடத்தில் மாத்திரம் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 68,192 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் காலப்பகுதியில் போதைப்பொருட்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்களில் 228,450 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மினுவங்கொடை, உன்னாருவ பிரதேசத்தில் ஹெரொயின், ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் நடத்திய சோதனையின் போது சந்தேகநபரிடமிருந்து 1 கிலோ 66 கிராம் ஹெரோயினும், 308 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
மினுவங்கொடை பகுதியை சேர்ந்த 37 வயதுடைய சந்தேகநபரே கைது செய்யப்பட்டுள்ளார்.