10 கிலோ குஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது

10 கிலோ குஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது

by Staff Writer 08-08-2025 | 1:21 PM

Colombo (News 1st) 10 கிலோ 260 கிராமுக்கும் அதிகளவான குஷ் போதைப்பொருளுடன் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொதட்டுவ, மானிகமுல்ல மற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கடுவெல நுழைவாயிலுக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த இருவரில் ஒருவரிடமிருந்து 5 கிலோ 154 கிராம் குஷ் போதைப்பொருளுடன் போதைப்பொருள் கடத்தலின் ஊடாக ஈட்டப்பட்ட ஒரு இலட்சம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

மற்றைய சந்தேகநபரிடமிருந்து 5 கிலோ 106 கிராம் அளவிலான குஷ் போதைப்பொருள் மற்றும் 150,000 ரூபா பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 35 மற்றும் 64 வயதுடைய கொதட்டுவ மற்றும் கொழும்பு 14 ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவித்தனர்.

ஏனைய செய்திகள்