பொரளை துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு

பொரளை துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு

by Staff Writer 08-08-2025 | 10:52 AM

Colombo (News 1st) பொரளை, சஹஸ்புர பகுதியில் ​நேற்று(07) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த ஏனைய நால்வரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

களனி பகுதியைச் சேர்ந்த 23 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

துபாயில் தலைமறைவாகியுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவருக்கு இடையில் நீண்ட காலமாக நிலவிவரும் முரண்பாடே துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமென பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

பொரளை, சஹஸ்புர பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஐவர் காயமடைந்தனர்.

மைதானத்திலிருந்த குழுவினரை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.