.webp)
மடிக்கணினி உள்ளிட்ட உபகரணங்களுடன் அக்குரேகொட பகுதியில் கைது செய்யப்பட்ட 11 இந்திய பிரஜைகளையும் நாடு கடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் அனைவரும் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் இன்று(07) ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
விமானப்படையின் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கமைய, அக்குரேகொட பகுதியில் வாடகை வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் கடந்த 4 ஆம் திகதி குறித்த 11 பேரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 03 பெண்களும் அடங்குகின்றனர்.
இணையத்தளம் வழியாக சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது