.webp)
Colombo (News 1st) மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளங்காணப்பட்ட கணவருக்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று(05) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி N.M.M.அப்துல்லாஹ் இந்த தீர்ப்பை வழங்கி உத்தரவிட்டார்.
திருகோணமலை - கந்தளாய் பகுதியில் 2019ஆம் ஆண்டு தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததாக குறித்த நபர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.
விசாரணைகளில் 39 வயதான பிரதிவாதி கொலையாளி என உறுதிசெய்யப்பட்டதால் சந்தேகநபருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.