.webp)
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 76 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் 41 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 43 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
கந்தர கபுகம பகுதியில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 48 வயதான வர்த்தகர், சிகிச்சைகளின் பின்னர் மாத்தறை வைத்தியசாலையிலிருந்து வௌியேறியுள்ளார்.
அவர் தனது வீட்டிலிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் T-56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருந்தது.
சந்தேகநபர்கள் வந்த மோட்டார் சைக்கிள், அவர்கள் அணிந்திருந்ததாக கூறப்படும் மேலங்கி மற்றும் முகமூடி என்பன யட்டியன பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.