2000 மெகாவோட் சூரியமின் உற்பத்தி திட்டம்

2000 மெகாவோட் சூரியமின் உற்பத்தி திட்டம்

by Staff Writer 02-08-2025 | 6:11 PM

2000 மெகாவோட் சூரியமின் உற்பத்தி திட்டத்தை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மகாவலி பிராந்தியத்தின் சில பிரதேசங்களை மையப்படுத்தி இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

வலுசக்தி அமைச்சு, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு இணைந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்தவுள்ளன.

முதலீட்டாளர்களுடனும் அதிகாரிகளுடனும் கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.