.webp)
பொலிஸ் சேவைக்கு தனியாக சம்பள கட்டமைப்பு தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி அடுத்த வருடத்திற்கான வரவு - செலவு திட்டத்தில் யோசனை சமர்ப்பிக்கப்படவுள்ளதென அமைச்சர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சின் ஆலோசனைக்குழுவில் அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை கூறினார்.
தற்போது பணியிலுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களின் செயல்திறனை அதிகரிப்பதற்காக பயிற்சி திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பொலிஸ் சேவையிலுள்ள சிக்கல்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
தவறான விடயங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சட்டவிரோத செயல்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள பொலிஸ் நிலையங்கள் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து விசேட கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பதில் பொலிஸ் மாஅதிபருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்