இன்று(01) முதல் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்..

இன்று(01) முதல் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்..

by Staff Writer 01-08-2025 | 10:16 PM


அதிவேக வீதிகளில் பொதுப் போக்குவரத்து சேவைகளில் பயணிக்கும் பயணிகள் ஆசனப்பட்டி அணிவதைக் கட்டாயமாக்கும் சட்டம் இன்று(01) முதல் அமுல்படுத்தப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்தது.

பயணிகளின் பாதுகாப்பிற்காக இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அதன் தலைவர் பீ.ஏ.சந்தரபால கூறினார்.

அதிவேக வீதிகளில் பயணிக்கும் அனைத்து இலகுரக வாகனங்களிலும் பின்னால் அமர்ந்து செல்லும் பயணிகளும் ஆசனப்பட்டியை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு குறிப்பிட்டது.

வீதி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறையை மீறி செயற்படும் சாரதிகள், பயணிகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸார் மற்றும் அதிவேக வீதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் கூறியது