இலத்திரனியல் கடவுச்சீட்டு அச்சிட விலைமனு கோரல்..

இலத்திரனியல் கடவுச்சீட்டு அச்சிட விலைமனு கோரல்..

by Staff Writer 30-07-2025 | 1:06 PM


 


இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை அச்சிடுவதற்கான விலைமனு கோரப்பட்டுள்ளது.

எதிர்வரும் 07 ஆம் திகதிவரை விலைமனுக்களை சமர்ப்பிக்க முடியுமென குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு விண்ணப்பிப்போருக்கு  அவற்றை தாமதமின்றி விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாளாந்தம் 3150 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்படுவதுடன் காலை 6.30 முதல் பிற்பகல் 2 மணி வரை கடவுச்சீட்டுகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமென குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. 
 

ஏனைய செய்திகள்