.webp)
இந்தியாவின் கேரள கடற்பிராந்தியத்தில் எல்ஸா த்ரீ கப்பல் விபத்துக்குள்ளானமையினால் இலங்கையின் கடற்சார் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீட்டை வழங்க கப்பல் நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.
லைபீரிய கொடியுடன் பயணித்த எம்.எஸ்.சி எல்சா சரக்கு கப்பல் கடந்த மே 25 ஆம் திகதி தீப்பற்றி விபத்துக்குள்ளானது.
இந்நிலையில் எல்ஸா த்ரீ கப்பல் நிறுவனத்தின் பிரதிநிதிகளையும் காப்புறுதி நிறுவனத்தின் பிரதிநிதிகளையும் கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடியதாக அதன் தலைவர் சமந்த குணசேகர தெரிவித்தார்.
கப்பல் விபத்தினால் நாட்டின் கடற்பிராந்தியந்தியங்களுக்கு ஏற்பட்ட சேதம் மதிப்பிடப்பட்டுவருவதாகவும் அவர் கூறினார்.
கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் விமானப்படை, கடற்படை மற்றும் இராணுவத்தினர் இணைந்து கடற்கரைகளை துப்புரவு செய்யும் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.