.webp)
Colombo (News 1st) வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா இன்று(29) காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று காலை முதல் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
தொடர்ந்து விநாயகப் பெருமான் மூஷிக வாகனத்திலும் முருகப் பெருமான் மயூர வாகனத்திலும் தேவியர் இருவரும் அன்ன வாகனத்திலும் கொடி ஸ்தம்பத்திற்கு அருகே எழுந்தருளினர்.
மங்கள வாத்தியங்கள் முழங்க, பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் நல்லையம்பதியின் பெருந்திருவிழா கொடியேற்றம் சுபவேளையில் நடைபெற்றது.
கொடியேற்றத்தைத் தொடர்ந்து எம்பெருமான் மீண்டும் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினார்.