.webp)
Colombo (News 1st) முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் பிரியந்த ஜயகொடி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திட்டமிட்ட குற்றச்செயலில் ஈடுபடும் குழுவின் உறுப்பினரான கெஹல்பத்தர பத்மே கொலை மிரட்டல் விடுத்ததாக போலி செய்தியை சமூக வலைத்தளத்தில் பரப்பியமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் லலித் பத்திநாயக்க மற்றும் தமக்கு கெஹல்பத்தர பத்மே பல சந்தர்ப்பங்களில் தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக பிரியந்த ஜயகொடி அண்மையில் தெரிவி்த்திருந்தார்.
எவ்வாறாயினும் பிரியந்த ஜயகொடியின் அறிவுறுத்தலின் பேரில் வேறொரு நபர் இந்த தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டிருந்தமை விசாரணைகளை மூலம் தெரியவந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.