ஜனாதிபதியின் மாலைதீவுக்கான உத்தியோகபூர்வ விஜயம்..

மாலைதீவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார் ஜனாதிபதி..

by Staff Writer 28-07-2025 | 12:14 PM

Colombo (News1st)ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மாலைத்தீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(28) பயணமாகினார்.

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டார்

இந்த விஜயத்தின் போது இருநாட்டு தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதுடன், இரு தரப்பினதும் பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் கைச்சாதிடவுள்ளனர்.

இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கிடையில் முறையான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டு இவ்வருடத்துடன், 60 ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில் ஜனாதிபதியின் மாலைத்தீவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஜனாதிபதி எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மாலைதீவில் தங்கியிருப்பாரென வௌிவிவகார அமைச்சு தெரிவித்தது.