பொரளை வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

பொரளை வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

by Staff Writer 28-07-2025 | 4:57 PM

Colombo (News 1st) பொரளை கனத்த சுற்றுவட்ட பகுதியில் பாரந்தூக்கி வாகனம் மேலும் சில வாகனங்களுடன் மோதி விபத்திற்குள்ளானதில்  ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த 07 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொரளை கனத்த சுற்றுவட்ட பகுதியிலுள்ள மின் சமிக்ஞைக்கு அண்மையில் பாரந்தூக்கி வாகனம் அதன் சுக்கான் செயலிழந்த நிலையில் நிறுத்தமுடியாமல் 40 மீட்டர் தூரம் வரை சென்றிருந்தது.

குறித்த வாகனம் மோட்டார் சைக்கிள்கள், கார் மற்றும் ஜீப்புடனும் மோதி விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பாரந்தூக்கி வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏனைய செய்திகள்