.webp)
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவை கைது செய்யுமாறு நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுவரும் வழக்கொன்றில் முன்னிலையாகாமையால் இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வழக்கில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையிலும் நாமல் ராஜபக்ஸ மாலைத்தீவுக்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனால் அவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.