.webp)
தீர்வை வரி குறைப்பு தொடர்பில் மற்றுமொரு தீர்மானமிக்க கலந்துரையாடல் இந்த வாரம் இடம்பெறவுள்ளது.
அமெரிக்காவினால் இலங்கைக்கு விதிக்கப்பட்ட 30 வீத தீர்வை வரியை மேலும் குறைக்கும் நோக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
நிதியமைச்சின் அதிகாரிகள் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் அலுவலக அதிகாரிகளுக்கு இடையே இந்த கலந்துரையாடல் Online ஊடாக நடைபெறவுள்ளது.
கலந்துரையாடல்களின் பிரதிபலன் எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதிக்கு முன்னர் கிடைக்கும் என இலங்கை பிரதிநிதிகள் குழு தெரிவித்தது.