ஜனாதிபதி அனுரவிற்கு மாலைதீவில் அமோக வரவேற்பு

ஜனாதிபதி அனுரவிற்கு மாலைதீவில் அமோக வரவேற்பு

by Chandrasekaram Chandravadani 28-07-2025 | 6:40 PM

Colombo (News 1st) மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு மாலைதீவுக்கு சென்றுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு மாலைதீவு தலைநகர் மாலேயில் அமைந்துள்ள குடியரசு சதுக்கத்தில் இன்று(28) நடைபெற்றது.

ஜனாதிபதியின் மாலைதீவுக்கான இந்த விஜயத்தின் போது இருநாட்டு தலைவர்களுக்கிடையே இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.

இருதரப்பு பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இதன்போது பரிமாறிக்கொள்ளப்படவுள்ளன.

இலங்கை - மாலைதீவு இடையிலான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் ஜனாதிபதி மாலைதீவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்த விஜயத்தில் இணைந்துள்ளனர்.

ஏனைய செய்திகள்