ஐரோப்பிய ஒன்றியத்தின் வரியை குறைத்தது அமெரிக்கா..

ஐரோப்பிய ஒன்றியத்தின் 30 வீத தீர்வை வரியை 15 வீதமாக குறைத்தது அமெரிக்கா

by Staff Writer 28-07-2025 | 12:38 PM

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மீது விதிக்கப்பட்ட 30 வீத தீர்வை வரியை 15 வீதமாக  அமெரிக்கா குறைத்துள்ளது.

ஐரோப்பிய  ஆணைக்குழுவின் தலைவர் உர்சுலா வொன்டெர்லேயன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையிலான பேச்சுவாரத்தைகளின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இருவருக்குமிடையிலான கலந்துரையாடல் நேற்று(28) ஸ்கொட்லாந்தில் நடைபெற்றது.

ஆகஸ்ட் முதலாம் திகதி  முதல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30 வீத தீர்வை வரி விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி  அண்மையில் அறிவித்திருந்தார்.

ட்ரம்ப் நிர்வாகத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளதாக ஐரோப்பிய ஆணைக்குழுவின்  தலைவர் உர்சுலா வொன்டெர்லேயன்  அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே இருவருக்குமிடையிலான கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதை அடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைச்சாத்திட்ட வரி ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமெரிக்காவில் 600 பில்லியன் டொலர்களை முதலீடு செய்ய  ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக்கொண்டுள்ளது.

மேலும் அமெரிக்காவின் இராணுவ ஆயுதங்களை கொள்வனவு செய்வதாகவும்  ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.