சிவில் பாதுகாப்பு அதிகாரிகளை இணைக்க திட்டம்

பத்தாயிரம் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளை பொலிஸ் சேவையில் இணைக்க திட்டம்

by Staff Writer 27-07-2025 | 7:27 AM

Colombo (News 1st) பத்தாயிரம் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளை பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் சுற்றிவளைப்புகளை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களையும் மையப்படுத்தி சிவில் பாதுகாப்பு அதிகாரிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு பிரதியமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

நாட்டிற்குள் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை தடுப்பதனூடாக போதைப்பொருள் பாவனையை குறைக்க முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

நாடளாவிய ரீதியில் இரவு மற்றும் அதிகாலை வேளையில் சுற்றிவளைப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு பிரதியமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.