.webp)
Colombo (News1st) பசறையில் சுமார் 50 அடி பள்ளத்தில் காரொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
பசறை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக நேற்றிரவு(24) கார் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரும் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டு பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.