.webp)
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்காக 3,000 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த வருடம் நிறைவடைவதற்கு முன்னர் புதிய வீடுகளின் நிர்மாணப்பணிகளை நிறைவு செய்யவுள்ளதாக நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியிலுள்ள கிராம உத்தியோகத்தர்கள் மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் பெறுபவர்களின் குடும்பங்களுக்காக இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன.
இதற்காக மக்களின் உதவிகளும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரித்தார்.