அமரர் ஆர்.ராஜமகேந்திரனின் 4ஆம் ஆண்டு நினைவு தினம்.

அமரர் ஆர்.ராஜமகேந்திரனின் 4ஆம் ஆண்டு நினைவு தினம்..

by Staff Writer 25-07-2025 | 3:45 PM

Colombo (News1st) கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் முன்னாள் தலைவர் அமரர் ஆர்.ராஜமகேந்திரனின் 04ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்(25).

மனிதாபிமானத்துடன் பல்வேறு துறைகளில் ஒப்பற்ற சேவையாற்றிய அன்னாரை நினைவுகூர்ந்து  நினைவேந்தல் நிகழ்வுகள் பல இன்று(25) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

மக்களின் இதயத்தை வென்ற சிறந்த தலைவராக, பல்வேறு துறைகளினூடாக இலங்கைக்கு தொண்டுகள் பல ஆற்றிய அமரர் ஆர்.ராஜமகேந்திரனின் ஆத்ம சாந்திக்காக நேற்றும்(24) இன்றும்(25) சமய அனுஷ்டானங்கள் நடைபெற்றன.

முன்னாள் தலைவரின் நினைவு தினத்தை முன்னிட்டு தெபானம கலையகத்தில் நேற்று(24) மாலை தர்மபோதனை நடைபெற்றதுடன் இன்று(25) காலை தானம் வழங்கப்பட்டது

இதேவேளை, அமரர் ஆர்.ராஜமகேந்திரனின் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கொழும்பு பிறேபுரூக் பிளேஸிலுள்ள எம்.ரி.வி, எம்.பி.சி. தலைமையகத்தில் மகா சங்கத்தினருக்கு தானம் வழங்கப்பட்டது.