.webp)
Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புரிமைகளை இரத்து செய்வது தொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
1986ஆம் ஆண்டின் 04ஆம் இலக்க ஜனாதிபதிகளுக்கான உரிமை சட்டமூலத்தை நீக்குவது தொடர்பான சட்டமூலமாக இது சமர்ப்பிக்கப்படவுள்ளது.
குறித்த சட்டமூலத்தை தயாரிப்பதற்காக கடந்த ஜூன் 16ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதுடன், அதற்கமைய தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்ட மாஅதிபரின் அனுமதி கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.