'ரொஹான் பிரேமரத்னவை கைது செய்யும் தீர்மானம் இல்லை'

பிரதி பொலிஸ் மாஅதிபர் ரொஹான் பிரேமரத்னவை கைது செய்ய தீர்மானம் இல்லை - இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு

by Staff Writer 22-07-2025 | 3:12 PM

Colombo (News 1st) குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் ரொஹான் பிரேமரத்னவை கைது செய்வதற்கான முயற்சிகள் இல்லையென இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று(22) அறிவித்தது. 

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் நடத்தப்படும் விசாரணைகளுக்கு அமைவாக தாம் கைது செய்யபபடுவதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதால் அதற்கு முன்னர் தம்மை முன்பிணையில் விடுவிக்குமாறு கோரி ரொஹான் பிரேமரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட முன்பிணை விண்ணப்பம் இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.