.webp)
Colombo (News 1st) பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என முறைகேடுகள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு அறிவித்துள்ளதாக சபாநாயகர் டொக்டர் ஜகத் விக்ரமரத்ன பாராளுமன்றத்தில் இன்று(22) அறிவித்தார்.
தேஷபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்காக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த குழுவின் அறிக்கை தம்மிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.
தேஷபந்து தென்னகோன் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் முறைகேடுகள் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகங்கள் தொடர்பாக விசாரணை செய்து அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் தலைவராக உயர் நீதிமன்ற நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன செயற்படுகின்றார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தவிசாளர் ஓய்வுபெற்ற நீதிபதி நீல் இத்தவெல மறறும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தவிசாளர் E.W.M.லலித் ஏக்கநாயக்க ஆகியோரும் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.