வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 37 பேர் பலி

வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 37 பேர் உயிரிழப்பு

by Chandrasekaram Chandravadani 20-07-2025 | 12:13 PM

Colombo (News 1st) வியட்நாமில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் குறைந்தது 37 பேர் உயிரிழந்துள்ளதோடு பலர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

நாட்டின் வட பகுதியில் அமைந்துள்ள பிரபல சுற்றுலாத்தலமான Ha Long Bay-யில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

பெரும்பாலானோர் வியட்நாம் தலைநகரை சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது.

மழையுடனான வானிலை காரணமாக தேடுதல் நடவடிக்கை முன்னெடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை 11 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

53 பேருடன் பயணித்த படகானது திடீரென வீசிய புயல் காரணமாக கவிழ்ந்துள்ளதாக அந்நாட்டின் கரையோர காவல்படை மற்றும் கடற்படை தெரிவித்துள்ளன.