.webp)
Colombo (News 1st) வத்தளை - ஹேகித்த பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஹேகித்த பகுதியில் உள்ள இரண்டு மாடி வீடொன்றிலிருந்த நபரை முச்சக்கர வண்டியில் வந்த அடையாளம் தெரியாத நால்வர் கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துள்ளனர்.
43 வயதான ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
2023ஆம் ஆண்டு மஹபாகே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இவர் உதவி புரிந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.