.webp)
Colombo (News 1st) நாட்டின் அனைத்து மாகாண செயலாளர்களும் அடுத்த வாரம் கொழும்புக்கு அழைக்கப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 06 மாதங்கள் தொடர்பான மீளாய்வு தொடர்பில் ஆராயப்படவுள்ளதாகவும் மாகாணங்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் பொது நிர்வாகம் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர், பேராசிரியர் சந்தன அபயரத்ன தெரிவித்துள்ளார்.