அஸ்வெசும மேன்முறையீட்டு கால அவகாசம் நாளை நிறைவு

அஸ்வெசும மேன்முறையீட்டு கால அவகாசம் நாளையுடன்(21) நிறைவு

by Staff Writer 20-07-2025 | 7:52 AM

Colombo (News 1st) அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்திற்காக மேன்முறையீடு செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நாளையுடன்(21) நிறைவடையுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

ற்போது இரண்டாம் கட்டத்தின் கீழ் அஸ்வெசும பயனாளர்களிடமிருந்து சுமார் 30,000 மேன்முறையீடுகள் கிடைத்துள்ளதாக சபை கூறியுள்ளது.

குறித்த மேன்முறையீடுகள் பிரதேச செயலகங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மேன்முறையீட்டு குழுவினூடாக மீளாய்வு செய்யப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.