.webp)
வெலிகம பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் தாரக நாணாயக்காரவின் வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வெலிகம - மாலிம்பட பகுதியிலுள்ள அவரது வீட்டை இலக்கு வைத்து இன்று(16) அதிகாலை நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டில் எவருக்கும் காயமேற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது வீட்டின் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த 2 பொலிஸ் உத்தியோகத்தர்களால் பதில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளில் 03 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ.வூட்லர் தெரிவித்துள்ளார்.