இஸ்ரேல் பிரதமர் பாராளுமன்ற பெரும்பான்மை இழக்கும்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராளுமன்ற பெரும்பான்மையை இழக்கும் அபாயம்

by Staff Writer 16-07-2025 | 2:53 PM

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராளுமன்ற பெரும்பான்மையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பிற்கு ஆதரவு வழங்கிய மதசார்புடைய கட்சியொன்று கூட்டணியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதால் இந்த நிலை ஏற்படலாமென சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மதசார்பு கட்சியின் 06 உறுப்பினர்கள் பாராளுமன்ற குழுக்கள் மற்றும் அமைச்சுகளிலிருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்துள்ளனர்.

நாட்டில் இராணுவ சட்டங்கள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளின் காரணமாகவே ஆளும் தரப்பிலிருந்து விலகுவதற்கு அவர்கள் தீர்மானித்துள்ளனர்.

ஏனைய கட்சிகளுடன் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு இஸ்ரேலிய பிரதமருக்கு கால அவகாசம் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காஸாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவரும் நிலையில் அதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டால் அதனை அமுல்படுத்துவதற்கு பாராளுமன்ற பெரும்பான்மையை பெற வேண்டும்.