வைத்தியர் மஹேஷி விஜேரத்ன பிணையில் விடுவிப்பு

வைத்தியர் மஹேஷி விஜேரத்ன பிணையில் விடுவிப்பு

by Staff Writer 15-07-2025 | 4:41 PM

Colombo (News 1st) விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் மஹேஷி விஜேரத்னவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க இன்று(15) உத்தரவிட்டார்.

50,000 ரூபா பெறுமதியான ரொக்கப்பிணை மற்றும் 05 மில்லியன் பெறுமதியான 02 சரீரப்பிணைகளில் சந்தேகநபர் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் வௌிநாட்டு பயணத்தடை விதித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் சந்தேகநபரான வைத்தியர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு பிரவேசிப்பதற்கும் நீதவான் தடை விதித்துள்ளார்.

மூன்றாம் தரப்பினர் ஊடாக அதிக விலைக்கு சத்திரசிகிச்சை மருத்துவ உபகரணங்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபரான வைத்தியர் மஹேஷி விஜேரத்ன கடந்த ஜூன் 17ஆம் திகதி முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

சந்தேகநபர் சார்பில் மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் விடுத்த பிணைக் கோரிக்கையை பரிசீலித்த நீதவான் சந்தேகநபரை பிணையில் விடுவித்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கு எதிர்வரும் அக்டோபர் மாதம் 28ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.