செம்மணி புதைகுழி; 3ஆம் கட்ட அகழ்வு 21ஆம் திகதி

செம்மணி மனித புதைகுழி; 3ஆம் கட்ட அகழ்வுப்பணிகள் 21ஆம் திகதி ஆரம்பம்

by Staff Writer 15-07-2025 | 9:19 PM

Colombo (News 1st) யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், இது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 06ஆம் திகதி திறந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான வழக்கு யாழ்.நீதவான் A.A.ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணைக்கு இன்று(15) எடுத்துக்கொள்ளப்பட்டது.