.webp)
தடை செய்யப்பட்ட ''பிரமிட் எதிர்ப்பு தேசிய விழிப்புணர்வு வாரம்" இன்று(14) ஆரம்பமாகின்றது.
"பெருங்கவலையின் உச்சகட்டம் - சூழ்ச்சியான பிரமிட் திட்டம்" எனும் தொனிப்பொருளில் இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களத்தினால் இதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், முப்படையினர், சிவில் பாதுகாப்பு அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், அரச ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக தௌிவூட்டப்படவுள்ளனர்
நாடளாவிய ரீதியில் 6,172 பாடசாலைகள் மற்றும் 14,022 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் ஊடாக குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
நிதி மோசடிகளிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு நிதியியல் கட்டமைப்பு தொடர்பில் உறுதிப்பாட்டை பேணுதல் இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்
இன்று(14) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை பிரமிட் எதிர்ப்பு தேசிய வாரம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.