.webp)
Colombo (News 1st) கன்னடத்துப் பைங்கிளி, அபிநய சரஸ்வதி என இரசிகர்களால் அழைக்கப்படும் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக் குறைவால் இன்று(14) காலமானார்.
பெங்களூரிலுள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அன்னார் தனது 87ஆவது வயதில் காலமானதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐம்பதாண்டு காலமாக திரைப்படத் துறையில் உள்ள 200-இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
திரையுலகின் பல விருதுகளுக்கு சொந்தக்காரியான சரோஜா தேவிக்கு பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளையும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கான இந்திய அரசின் தேசிய விருதும் வழங்கப்பட்டது.
'மகாகவி காளிதாஸ்' என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் 1955ஆம் ஆண்டு அறிமுகமானார்.
'இல்லறமே நல்லறம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, நாடோடி மன்னன் திரைப்பட்டத்தில் கதாநாயகியாக தமிழ் இரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
அன்னாரின் மறைவுக்கு இரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் தமது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.