.webp)
Colombo (News 1st) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தம்மை கைது செய்வதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்பிணை கோரிக்கை மனு தாக்கல் செய்துள்ளார்.
கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் மணல் அகழ்வு வேலைத்திட்டத்தை கொரிய நிறுவனமொன்றுக்கு வழங்கி அரசாங்கத்திற்கு 2 கோடி ரூபாவிற்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் தம்மை கைது செய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவித்து ராஜித சேனாரத்ன முன்பிணை மனுவை தாக்கல் செய்துள்ளார்.
எதிர்வரும் 18ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.