.webp)
Colombo (News 1st) பணிநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய இன்று(09) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
25,000 ரூபா ரொக்கப்பிணை மற்றும் தலா 2 மில்லியன் ரூபா பெறுமதியான 2 சரீரப்பிணைகளில் சந்தேகநபரை விடுவிக்க கொழும்பு பிரதம நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க உத்தரவிட்டார்.
சந்தேகநபருக்கு வௌிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பொதுமன்னிப்பை முறையற்ற விதத்தில் பயன்படுத்தி அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவரை விடுவிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் துஷார உபுல்தெனிய கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.