.webp)
Colombo (News 1st) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 14 நாடுகளுக்கு புதிய தீர்வை வரியை விதித்துள்ளார்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 14 நாடுகளுக்கும் 90 நாட்கள் வரிநிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த பின்புலத்தில் ட்ரம்ப்பினால் தீர்வை வரி புதுப்பிக்கப்பட்டுள்ளது.
லாவோஸ், மியன்மார், கம்போடியா, தாய்லாந்து, பங்களாதேஷ், சேர்பியா, இந்தோனேஷியா, தென்னாபிரிக்கா, பொஸ்னியா, ஜப்பான், தென் கொரியா, மலேசியா, கஸக்ஸ்தான் மற்றும் துனிசியா ஆகிய 14 நாடுகளின் மீதே இவ்வாறு வரி விதிக்கப்பட்டுள்ளது.