.webp)
Colombo (News 1st) தரமற்ற தடுப்பூசிகளை வைத்தியசாலைகளுக்கு விநியோகித்தமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பிரதிவாதிகளையும் எதிர்வரும் 11ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகளால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
பிரதிவாதிகளுக்கு எதிராக 13 குற்றப்பத்திரிகைகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகளான மஹேன் வீரமன், அமாலி ரணவீர மற்றும் பிரதீப் அபேரத்ன முன்னிலையில் எதிர்வரும் 11ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.