.webp)
Colombo (News 1st) ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் மற்றும் விமான நிறுவனங்களில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மோசடி, ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி விசேட விசாரணை குழுவை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் H.M.காமினி விஜேசிங்க தலைமையில் விசேட விசாரணைக்குழு செயற்படவுள்ளது.
2010 - 2025 காலகட்டத்தில் இடம்பெற்ற கொடுக்கல் - வாங்கல் தொடர்பான விசாரணைகள் இந்த விசேட குழுவினால் முன்னெடுக்கப்படவுள்ளது.