.webp)
Colombo (News 1st) பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 77 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஆரம்பத்தில் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.
அணியின் முதல் 4 விக்கெட்களும் 89 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன.
குசல் மென்டிஸ் 45 ஓட்டங்களை பெற்றார்.
ஒரு பக்கம் விக்கெட்கள் வீழ்த்தப்பட்டாலும் அணித்தலைவருக்கே உரிய பாணியில் தனித்து போராடிய சரித் அசலங்க சர்வதேச ஒருநாள் அரங்கில் ஐந்தாவது சதத்தை பூர்த்தி செய்து 106 ஓட்டங்களை பெற்றார்.
இலங்கை அணி 49.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 244 ஓட்டங்களை பெற்றது.
வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பங்களாதேஷ் சார்பில் தன்சித் ஹசன் 62 ஓட்டங்களை அதிரடியாக பெற்றார்.
16.3 ஓவர்களில் 100 ஓட்டங்களை பெற்ற பங்களாதேஷ் வலுவான நிலைக்கு முன்னேறியது.
என்றாலும் வனிந்து ஹசரங்க 4 விக்கெட்களையும் கமிந்து மென்டிஸ் 3 விக்கெட்களையும் அபாரமாக வீழ்த்தி இலங்கை அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
பங்களாதேஷ் 36 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 167 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
போட்டியில் 77 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக சரித் அசலங்க தெரிவானார்.