.webp)
காஸாவில் 60 நாட்கள் போர் நிறுத்தத்திற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்
மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்காக அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்றுவதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
காஸாவில் அமைதியை நிலைநாட்டுவதற்கு முயற்சித்த கட்டார் மற்றும் எகிப்து இறுதி முன்மொழிவை வழங்குவார்களென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தம் தொடர்பில் இஸ்ரேலிய அதிகாரிகளுடன் வொஷிங்டனில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னரே அவர் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார்.
காஸாவில் இஸ்ரேல் - ஹமாஸூக்கிடையிலான மோதல் அதிகரித்துவரும் பின்னணியில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
மத்திய கிழக்கின் நன்மைக்காக போர் நிறுத்தத்திற்கான நிபந்தனைகளை ஹமாஸ் அமைப்பினர் ஏற்றுக்கொள்வார்கள் என தான் நம்புவதாகவும் இணக்கப்பாடு எட்டப்படாத பட்சத்தில் நிலைமை மோசமாகிவிடும் எனவும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்