இலங்கை-பங்களாதேஷ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்

இலங்கை -பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்

by Staff Writer 02-07-2025 | 11:20 AM

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று(02) ஆரம்பமாகவுள்ளது.

இன்று பிற்பகல் 2.30க்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இந்த தொடரில் இலங்கை அணியை சரித் அசலங்க வழிநடத்தவுள்ளார்.

தொடருக்காக 16 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய போட்டியில் மிலான் ஜயதிலக்க இலங்கை அணிக்காக விளையாட வாய்ப்பிருப்பதாக இலங்கை அணித்தலைவர் சரித் அசலங்க தெரிவித்தார்.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான சர்வதேச ஒருநாள் போட்டி தொடர்பில் தெளிவுபடுத்துவதற்கான ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை கூறினார்.